சீனாவில் படிப்பை முடித்துவிட்டு திரும்ப இருந்த நிலையில் குமரி மருத்துவ மாணவி திடீரென இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ரூபாய் 21 லட்சம் கேட்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குமரி மாவட்டம், அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சி புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் ஜவுளி வியாபாரி அவருடைய ஒரே மகள் ரோகினி வயது 27. இவர் சீனா நாட்டில் மருத்துவ படிப்புக்காக சென்றிருந்தார். அங்க படிப்பை முடித்த நிலையில் தற்போது ஊர் திரும்ப தயாராக இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை ரோகிணி மேற்கொண்டார். இதனை அறிந்த பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். டாக்டர் ஆகிய ஏழை மக்களுக்கு தனது மகள் சேவை செய்யப் போகிறார் என்ற உற்சாக மனநிலையில் இருந்த பெற்றோருக்கு பேருடியை போல் அதிர்ச்சி செய்தி ரோகிணியுடன் படிக்கும் சக மாணவி ஒருவர் தெரிவித்தார். அதாவது காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரோகிணி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சோகமான செய்தியை கேட்டு, அவர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோகிணியின் பெற்றோர், உறவினர்கள், கலெக்டர், வெளியுறவுத்துறை, மந்திரிக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் 4 நாட்கள் ஆகிய மாணவியை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே ரோகிணி உடலை கொண்டு வர ரூபாய் 21 லட்சம் தேவைப்படும் என அவரை தந்தையிடம் சீனாவில் இருந்து கேட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவுக்கு மருத்துவம் படிக்க ரூபாய் 50 லட்சம் என்று பேசி தான் ஏஜென்சி மூலம் மக்களை கோபாலகிருஷ்ணன் படிக்க அனுப்பியுள்ளார். இது போக படிப்புக்கு இடையே அடிக்கடி கடன் வாங்கி மகளுக்கு பணம் அனுப்பி இருக்கிறார்.

ஆகவே தற்போது அதிக அளவில் கோபாலகிருஷ்ணனுக்கு கடன் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூபாய் 21 லட்சம் தந்தால் மட்டுமே உடனே அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என ரோகிணியுடன் படித்ததாக கூறும் மாணவர் ஒருவர் அடிக்கடி கோபாலகிருஷ்ணனிடம் பேசி வருகிறார். இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார். ஏற்கனவே மகளை இழந்த சோகத்தில் இருக்கும் தந்தை ரூபாய் 21 லட்சம் கொடுத்தால் தான் மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியும் என்ற பரிதாப நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவாகரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மாணவன் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது.