காஞ்சிபுரம் மாநகரில் நேற்று மாலை வேளையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
சுமார் 2மணி நேரத்திற்குள்ளாகவே12.76செ.மீட்டர் அளவு மழையானது கொட்டித் தீர்த்ததால் காஞ்சிபுரம் மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,ஓரிக்கை,செவிலிமேடு,பேருந்து நிலையம்,அன்னை இந்திர காந்தி சாலை, ரங்கசாமிகுளம்,செட்டித்தெரு, டோல்கேட்,ஒலிமுகமதுபேட்டை என பல்வேறு பகுதிகளிலுள்ள சாலைகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியும்,ஆங்காங்கே மழை வெள்ள நீர் வெளியேறாத காரணத்தால் கால் முட்டியளவிற்கு மழை நீரானது சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
An atrocity where a drunken teenager lies down in the rain and swims merrily…
குடிபோதையில் வாலிபர் ஒருவர் மழையில் நனைந்தப்படியே ஜாலியாக படுத்துக்கொண்டுநீச்சல் அடித்து அட்ராசிட்டி…https://t.co/hDXfPyJDCI#kanchipuram #Tasmac #rain #watch #TNGovt #SenthilBalaji— The News Collect – unfolding the truth . (@tncollect) May 6, 2023
இந்நிலையில் காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் அருகாமையில் குளம் போல் தேங்கிய மழை வெள்ள நீரில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் மழையில் நனைந்த படியே ஜாலியாக படுத்துக்கொண்டு நீச்சல் அடித்தும்,மழை நீரில் சாவகாசமாக கால்களை நீட்டியப்படி உட்கார்ந்து கொண்டு பல்வேறு அட்ராசிட்டி செய்துள்ளார்.
இதனைக்கண்ட அருகிலுள்ளவர்கள் குடிபோதையில் வாலிபர் செய்யும் அட்ராசிட்டிகளை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.