கல்வராயன்மலை : பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு..!

2 Min Read
பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் பருவ மழை பெய்து வரும் மழையின் காரணமாக பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஆகும். இங்கே ஓங்கி உயர்ந்த மலைகள் மற்றும் மரங்களுடன் இயற்கை அழகுடன் காட்சி அளிக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

மேலும் இங்கு மேகம் பெரியார், செருக்கலாறு, எட்டியாறு உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர் வீழ்ச்சிகளுக்கு காண வரும் சுற்றுலாப் பயணிகள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் வந்து குளித்து செல்வது வழக்கம். மேலும் மேகம் பெரியார், எட்டியாறு, சேர்க்கலாறு போன்ற உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் பொதுமக்கள் குளிப்பதற்கு ஏற்ற இடமாக இல்லை இருப்பினும் அங்கு இளைஞர்கள் சென்று குளித்து வருவார்கள்.

பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் கல்வராயன் மலை செல்லும் சாலையின் ஓரத்தில் இடையே பாதுகாப்பு அம்சங்களுடன் நீர் வீழ்ச்சி உள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிகளை காண கார், பஸ், வேன் போன்ற வாகனங்களில் வந்து குளித்து செல்வார்கள் என்று ஒரு வழக்கமாகும். குறிப்பாக திருவிழா மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் இங்கும் படகு துறைக்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்வார்கள் என்று குறிப்பிடபடும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்வராயன் மலை பகுதியில் பருவ மழை விட்டு விட்டு அதிக அளவில் பெய்து வருவதால் அங்குள்ள காட்டாறு மற்றும் ஓடைகளில் அதிக நீர்வரத்து காணப்பட்டது.

பெரியார் நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து இருக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குறிப்பாக கோமுகி அணைக்கு கல்வராயன் மலையில் இருந்து வரும் பொட்டியம், மாயம்பாடி, கல்பொடை போன்ற ஆறுகளில் இருந்து அதிகளவு நீர்வரத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு சில நேரங்களில் இந்த பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கும் செய்கின்றனர். அப்போது அதிக நீர் வரத்து உள்ளதால் கோடை காலம் வரை பெரியார் நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து இருக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a review