பெண்களை மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி காமக்கொடூரனுக்கு போலீசார் வலை..!

2 Min Read

சங்கராபுரம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி தனிமையில் இருந்த வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிய பணம் பறித்த காம கொடூரனின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி.

- Advertisement -
Ad imageAd image
வீடியோவில் பேசிய போது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் அருண் பிரசாத் என்கிற சிட்டா. இன்ஸ்டாகிராமில் சிட்டா பல வீடியோக்களை வெளியிட்டு பலரை கவர்ந்து வந்துள்ளார். இவருடைய வீடியோ மீது மோகம் கொண்டு சில பள்ளி மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பள்ளி மாணவிகளிடமும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பெண்களிடம் தனிமையில் இருக்கும்போது எடுத்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை வைத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி அச்சுறுத்தல் செய்து பல பெண்களிடம் தொடர்ந்து பணம் பறித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் வீடியோக்கள்

அதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் அருண் என்கிற சிட்டா எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரது உறவினர்கள் சங்கராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர், பின்னர் இதே போன்று பல பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதில் ஒரு பெண் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆபாச படங்கள் அடங்கிய செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துதாகவும் கூறப்படுகிறது.

ஆபாச பட்ங்களை வைத்து பணம் கேட்ட காமகொடுரன்

ஆனால் இதுவரை அருண்பிரசாத்தை கைது செய்யப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அருண் பிரசாத் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும், மேலும் ஓரிரு தினங்களில் காமக்கொடூரன் சிட்டா என்கின்ற அருண்பிரசாத் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடு தப்பிச்செல்லும் நிலையில் போலீசார் விரைந்து சென்று அவனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் பழகி தனிமையில் இருந்து ஆபாச படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு பல பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

 

 

 

 

 

Share This Article
Leave a review