வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் – ஆற்றில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்.

1 Min Read

மதுரை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை காண்பதற்காக மதுரை மட்டுமன்றி தென் மாவட்ட மக்கள் அண்டை மாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image
வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்

இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி முடிந்து அழகர் புறப்பட்ட உடன் கள்ளழகரை காண வந்த இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆற்றில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்

அப்போது ஒரு தரப்பு இளைஞர் பட்டாக்கத்தியை வைத்து சரமாரியாக எதிர்தரப்பு இளைஞரை தாக்கினார். இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அழகர் எழுந்தருளும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும் கூட இளைஞர்கள் எவ்வாறு பட்டாக்கத்தியை வைகை ஆற்று பகுதியில் எடுத்துச் சென்றார்கள் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த திருவிழா கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.

ஆற்றில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்

அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் அந்த இளைஞர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்கிற விவரம் தற்போது வரை தெரியவில்லை.

ஆற்றில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என காவல்துறையினர் தீவிரமாக தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review