மஞ்சள் வெயில் மாலையிலே..கணவரோடு செம ரொமான்ஸ் மோடில் காஜல் அகர்வால்.. குவியும் லைக்ஸ்..

2 Min Read
  • தென்னிந்திய சினிமா உலகத்தில் தான் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்றைக்கு வரை தொடர்ந்து முன்னணி கதாநயகர்களின் படங்களிலும், ஹிட் ஆகும் படங்களிலும் நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

இவரது சினிமா வாழ்க்கை கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான கியூன் ஹோ கயா நா என்ற இந்திப் படத்தில் தொடங்கியது. பழனி, பொம்மலாட்டம் தமிழ் மக்கள் மத்தியில் கவனமீர்த்த படங்களாக இருந்தது.

- Advertisement -
Ad imageAd image

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை, கணவருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக 30 வயதைக் கடந்து விட்டாலே ஒரு நடிகையை தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் கதாநாயகி கதாபாத்திரங்கள் கொடுக்காமல் ஓரம் கட்டாப்படுவார்கள். ஒருசிலர் மட்டும்தான் தனது மார்க்கெட்டினை சரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அப்படியான நடிகைகள் பட்டியலில் காஜல் அகர்வால் பெயர் இன்றும் இருக்கின்றது. கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கில் வெளியான சத்யபாமா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தமிழில் துப்பாக்கி, மெர்சல், நான் மகான் அல்ல, மாரி, பாயும் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள மிகப்பெரிய படமாக இந்தியன் 2 உள்ளது. இந்தப் படம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கீட்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு நீல் கீச்சுலு என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம், அதன் பின்னர் குழந்தை பிறந்த பின்னரும் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் காஜல் நடித்து வருகின்றார். இவர் அதிகப்படியான பணக்காரர்கள் வசிக்கக்கூடிய மும்பையின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றார். இவரிடம் ஆடி, மெர்சிடஸ் மற்றும் மினி கூப்பர் போன்ற விலை உயர்ந்த கார்கள் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 85 கோடி ஆகும். இவர் ஒருபடத்தில் நடிக்க ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்குகின்றார் என கூறப்படுகின்றது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/weavers-are-protesting-to-sell-silk-cloth-to-the-tune-of-43-crore-rupees-and-to-give-bonus/

சினிமா வாயுப்புகள் கொஞ்சம் டல் அடிக்கும்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கி மக்கள் மத்தியில் தன்னை தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றார். விளம்பரங்களில் நடித்து தனது முகத்தினை மக்கள் மறக்காத வண்ணம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் கணவர் குழந்தை என காஜல் அகர்வால் செம ஹேப்பியாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

Share This Article
Leave a review