விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
தமிழகத்தில் பாமக ஒரு இன்றியமையாத கட்சி ஆர் எஸ் எஸ் இல் இருந்து பாஜக வந்தது போல தான் வன்னியர் சங்கத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வந்துள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக சந்திக்க தயாராக உள்ளதா? என்றால், தயாராக இல்லை என்பது தான் உண்மை. மற்ற கட்சியினர் பூத் கமிட்டி அமைத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
பாமகவினர் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் நெய்வேலி என்எல்சி பிரச்சனை தற்போது தான் வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. அதை நிரப்ப நம்மால் மட்டும் தான் முடியும் என்றார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு என் உயிரையும் விடுவேன்,என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,அதை எப்படியாவது நாம் பெற்றாக வேண்டும்.
மேலும் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் உத்த அருள்மொழி திலகபாமா முன்னாள் மத்திய அமைச்சர் இயக்கிய மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான ஊர் கலந்து கொண்டனர்.