தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு – 700 காளைகளுடன், 350 வீரர்கள் ஜல்லிக்கட்டு..!

2 Min Read

திருகானூர்பட்டியில் புனித அந்தோனியார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700 காளைகளும் – 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருக்கானூர்ப்பட்டியில் தொடங்கியது. புனித அந்தோனியார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும் – தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

போட்டியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்

முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். காலை 7 மணிக்கு மாதா கோவில் தெருவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. பின்னர் வீரர்கள் உறுதி மொழி ஏற்ற பிறகு ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியினை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று மிரட்டியது. முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 350 மாடு ப்பிடி வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டித் தொடங்கியது

பத்து சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. மாடுப்பிடி வீரர்களிடம் பிடிப்படாத காளைக்கும். காளையை பிடித்த மாடுப்பிடி வீரருக்கும் உடனடியாக பித்தனை குவளை, சில்வர் குடம், கேஸ்ஸ்டவ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் பொருட்கள் மற்றும் பல்சர் பைக் பரிசாக வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு போட்டி நடைப்பெறுகிறது.

Share This Article
Leave a review