செலவு செய்த இந்தியருக்கு சிறை.! சிங்கப்பூரில் வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பல லட்சம்.

2 Min Read
  • சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த பெரியசாமி மதியழகன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நிறுவனத்திடம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.. அதேநேரம் அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக 25 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (16 லட்சம்) வரவு வைக்கப்பட்டது. அதை உடனடியாக எடுத்து செலவு செய்தார். இந்த குற்றத்திற்காக அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அண்மைக் காலமாக வங்கி கணக்குகளில் தவறுதலாக கோடிகளில் வரவு வைக்கப்பட்டதாக செய்திகளை பார்த்திருப்போம். சென்னையைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ராஜ்குமாரின் வங்கிக் கணக்குக்குத் திடீரென்று ரூ.9,000 கோடியைத் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு முறை வரவு வைத்தது. சர்வர் செக்யூரிட்டியில் நடந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அப்போது வங்கி தரப்பில் சொல்லப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இதேபோல் ஒரு முறை சென்னை தி.நகரின் ஒரு தனியார் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கோடி வரை தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது. அரசு விடுமுறை தினமாக அன்று அந்த வாடிக்கையாளர் கிளையின் அதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார், வங்கி சர்வரில் உருவான தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர் ரூ.15 லட்சத்தை வேறு ஒருவருக்குத் தவறாக அனுப்பிவிட்டார்.

பணம் பெறப்பட்ட வாடிக்கையாளர் அந்தப் பணத்தை ”பிரதமர் மோடி தனக்கு அனுப்பிய ரூ.15 லட்சம்” எனக் கூறி செலவு செய்துவிட்டார், அவர் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட முடியவில்லை. ஏனெனில் இது வாடிக்கையாளர் செய்த தவறாகும். ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் நடக்கும் இந்தக் காலத்தில் இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இன்றைய சூழலில் ஒருவருக்கு வங்கி கணக்கில் தவறுதலாக சின்னத் தொகை வந்தாலும், பெரிய தொகை கிரெடிட் செய்யப்பட்டாலும், அதை சம்பந்தப்பட்ட வங்கிக்கு போனில் அழைத்து உடனே தெரியப்படுத்துவது முக்கியம் ஆகும். அப்படி செய்யாமல் தனக்கு சொந்தமில்லாத அந்த பணத்தை எடுத்து செலவு செய்வது சட்டபடி குற்றமாகும். இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் இதுதான் சட்டம். இந்தியாவில் இந்த குற்றத்திற்காக யாரும் தண்டிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.. அதேநேரம் சிங்கப்பூரில் ஒருவர் அதுவும் இந்தியாவைச் சேர்ந்தவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/84-year-old-man-allowed-to-appear-in-video-conference-for-charge-sheeting-court-orders-cbi-court/

இந்தியாவை சேர்ந்தவர் பெரியசாமி மதியழகன் (வயது 47). சிங்கப்பூரில் உள்ள என்ஜினியரிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவருடைய வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.16 லட்சம் (25 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்) வரவு வைக்கப்பட்டிருந்தது. தன் அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த பணமாக இருக்கும் என கருதி அந்த 16 லட்சம் ரூபாயையும் தன் குடும்பத்தினருடைய வங்கி கணக்குகளுக்கு உடனடியாக பணபரிமாற்றம் செய்துவிட்டார்.

இந்தநிலையில் கொஞ்ச நேரத்தில் அந்த பணம் மதியழகன் பெயரில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாகவும் உடனடியாக அதனை திரும்பி தருமாறும் அவர் பணியாற்றி வந்த அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த பணத்தை அவரால் திருப்பி தரமுடியவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் கோர்ட்டு விசாரித்த நிலையில் மதியழகனுக்கு 9 வாரங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Share This Article
Leave a review