இத்தாலி – சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை 2 சிறுவர்கள் தேர்வு..!

1 Min Read

இத்தாலியில் நடைபெற உள்ள சர்வதேச ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிக்கு இந்தியாவில் 6 பேர் தேர்வாகியுள்ள நிலையில் கோவை 2 சிறுவர்கள் தேர்வாகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

வருகிற செப்டம்பர் 6 முதல் 20 வரை இத்தாலி நாட்டில் சர்வதேச ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்தியா சார்பில் 6 பேர் பங்கேற்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 3 பேர் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளது.

இத்தாலி – சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை 2 சிறுவர்கள்

அதில் கோவை துடியலூர் சேர்ந்த ஐஸ்வர்யா (15) மற்றும் செல்வ புரத்தை சேர்ந்த கிஷோர் கிருஷ்ணா (17) ஆகிய இருவரும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதால் இவரும் ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

கோவை சிறுமி

இதற்காக ஐஸ்வர்யா மற்றும் கிஷோர் கிருஷ்ணா ஆகிய இருவரும் கோவை வ.உ.சி பூங்கா அருகே உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறுவர்கள் கூறும் போது:-

கோவை சிறுவர்

கடந்த 12 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிறசி பெற்று வருவதாகவும், ஏற்கனவே நடந்த தேசிய அளவிலான ஸ்கேட்டிங் பதக்கங்கள் பெற்றுள்ளதால் தற்போது சர்வதேச அளவில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் விளையாட கடுமையான பயிற்சி எடுத்து வருவதாகவும், ஆனைகட்டி மலைப்பகுதியில் சரிவான பகுதியில் கடும் பயிற்சி எடுத்து வருவதால் கண்டிப்பாக நாங்கள் தங்கப்பதக்கம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Share This Article
Leave a review