கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியார் பக்கத்து வீட்டு சிறுவனுக்கு சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் ஒரு வருடங்களுக்குப் பிறகு மருமகள் கைது…

2 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார்  கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 60).,  இவரது மனைவி கொளஞ்சியம்மாள் (55), இவர்களது மகன் வேல்முருகன்.வேல்முருகன் வெளிநாடு ஒன்றில் வேலை பார்க்கிறார். வேல்முருகனுக்கு கீதா (33) என்ற மனைவியும் அகிலேஷ்வர் (12), சரவணகிருஷ்ணன் (6) என இரு மகன்கள் உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில், கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி கொளஞ்சியம்மாள் தனது வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதனை சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணகிருஷ்ணன் ஆகியோர் சாப்பிட்டனர். மேலும், அருகாமை வீட்டைச் சேர்ந்த பிரபு மகன் நித்தீஷ்வரன் (8), மகள் பிரியதர்ஷினி (4), ஆகியோரும் சாப்பிட்டனர். அப்போது,  கொளஞ்சயம்மாளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.  அவரைத் தொடர்ந்து அவரது கணவர் சுப்ரமணியன், சிறுவர்கள் சரவணகிருஷ்ணன், நித்திஷ்வரன், பிரியதர்ஷனி ஆகியோருக்கும் வாந்தி, பேதி . ஏற்பட்டது.  உடன் அருகில் இருந்த கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள் கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி 4 ந் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுப்ரமணியனும் அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களுடைய பக்கத்து வீட்டு சிறுவன் நித்திஷ்வரன் கடந்த 12-1 – 2022ந் தேதி சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் வேல்முருகனின் மனைவி கீதா விருத்தாசலம் புது குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரிஹரன் (43), என்பவருடன் கள்ளக்காதலில் இருந்தது தெரிய வந்தது.

இதனை அறிந்த அவருடைய மாமியார் கொளஞ்சியம்மாள் அப்போது வெளிநாட்டில் இருந்த தன்னுடைய மகன் வேல்முருகனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் துணையோடு முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷம் கலந்த முள்ளங்கி சாம்பாருடன் சாப்பாடு சாப்பிட்ட கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், நித்தீஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர்  நடத்தி வந்த விசாரணையில் ஒரு வருடத்திற்கு பிறகு  துப்பு துவங்கியதால் கொலை வழக்காக மாற்றி, கீதாவையும் அவருடைய கள்ளக்காதலன் ஹரிகரனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காலனுக்காக தன்னுடைய மாமனார் மாமியாரை கொலை செய்ய சம்பாரில் விஷம் கலந்ததால்  மாமனார் மாமியார் மற்றும் அதனை சாப்பிட்ட பக்கத்து வீட்டு சிறுவனும் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீதா ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பூமாலை என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review