தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்தது வரவேற்கதக்கது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நிதியே ஒதுக்காமல் கடந்த ஆட்சியில் டெண்டர் விட்டு விட்டு சென்றனர். இப்போது அதனை சரி செய்து செயல்படுத்துகிறோம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனைக்கட்டில் பேட்டி.

வேலூர் மாவட்டம், அனைக்கட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் 514 பயனாளிகளுக்கு சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் குடியாத்தம், சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் அனைக்கட்டு பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி ரத்து செய்துள்ளது வரவேற்கதக்கது.

இதனை பலர் தவறாக பயன்படுத்தினார்கள். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அவர்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இரண்டு இடங்களில் நிதியே ஒதுக்காமல் டெண்டரை விட்டு விட்டு சென்று விட்டனர். ஆனால் நாங்கள் அதனை தற்போது நிதியை ஒதுக்கி அதனை செயல்படுத்தி வருகிறோம்.

திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வேனுகோபால். இவர் மறைவு என்பது வேதனை அளிக்கிறது. அதனை தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக எந்த குற்றச்சாட்டிற்கும் ஆளாகாதவர் எல்லா தரப்பினருக்கும் நல்லவர் அவர் மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்று கூறினார்.