போர் நிறுத்தத்திற்கு “NO” சொல்லிய இஸ்ரேல் , தரைப்படை தேடுதல் வேட்டையில் 19 வயது பெண் சிப்பாய் மீட்பு

2 Min Read
மீட்கப்பட்ட பெண் சிப்பாய் ஓரி மெகிடிஷ்

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலின் பெரிய சாதனை நிகழ்வாக காசாவில் இருந்து இஸ்ரேல் தரைப்படையை சார்ந்த 19 வயது பெண் சிப்பாய் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்,  மேலும் போர்நிறுத்தம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  “போர் நிறுத்தத்திற்கான அழைப்பு இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய போடும் சதி திட்டம் ! அது ஒருபோதும் நடக்காது ” என்று  தெரிவித்தார் .

- Advertisement -
Ad imageAd image

இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவில் தங்களது தாக்குதல்களை திங்கள்கிழமை முதல் மேலும் தீவிர படுத்தியுள்ளது , முக்கிய நகர பகுதிகளில் டாங்கிகள் மற்றும் பிற தரைப்படை வாகனங்களில் முன்னேறி, ஹமாஸ் ஆயுத போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இஸ்ரேலிய சிப்பாயை மீட்டுள்ளனர் .

மேலும் போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்தார். ஹமாஸின் அக்டோபர் 7 , ஊடுருவலின் போது பிடிபட்ட ஒரு சிப்பாய் காஸாவில் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. யுத்தம் தொடங்கிய பின்னர் நடந்த முதல் மீட்பு இதுவாகும் .

பெஞ்சமின் நெதன்யாகு

மீட்கப்பட்டவர் இஸ்ரேலிய ராணுவத்தை சேர்ந்த பெண் சிப்பாய் பிரைவேட் ஓரி மெகிதிஷ், (வயது 19) என்றும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர் .

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மீட்கப்பட்ட பிரைவேட் ஓரி மெகிதிஷ்யை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , ” இது இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளின் “சாதனை” என்றும் “அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை விளக்குகிறது” என்றும் கூறியுள்ளார் .

சிறைப்பிடிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுத போராளிகளை விடுவிப்பதற்கு அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளையும் அவர் நிராகரித்தார், இது கடினமானது என்று அவர் கூறினார்.

“போர்நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது ஹமாஸிடம் சரணடைய இஸ்ரேலுக்கான அழைப்பாகும் , அது ஒரு போதும் அரங்கேறாது ” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் .

ஹமாஸ் ஆயுத போராளிக் குழுக்கள் இஸ்ரேலை சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 240 நபர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

இதுவரை நான்கு பிணைக் கைதிகளை தாமாக முன்வந்து விடுவித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் பிடியில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கைதிகளுக்குப் பதில் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள மற்ற பிணைக்கைதிகளையும் விடுவிக்க தயாரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது , அனால் இந்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது .

தரைப்படையின் தீவிர தேடுதல் வேட்டை மூலம் பணயக்கைதிகளை மீட்பதற்கான “சாத்தியத்தை அதிகரித்துள்ளது ” என்று இஸ்ரேலிய பிரத மந்திரி நெதன்யாகு கூறினார், ஹமாஸ் “அழுத்தத்தின் கீழ் மட்டுமே பணயக்கைதிகளை விடுதலை செய்யும்” என்றும் கூறினார்.

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 8,300 கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கொல்லப்பட்டதாகவும் , மேலும் காசாவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது .

ஹமாஸின் அக்டோபர் 7 ம் தேதி தாக்குதலில் இஸ்ரேலிய தரப்பில் 1,400 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவிக்க பட்டுள்ளது.

Share This Article
Leave a review