இஸ்ரேல் – ஹமாஸ் போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசாவில் மட்டும் இதுவரை 15 ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சர்வதேச மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் ஒரு வார காலத்துக்கு போர் இடைநிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க சர்வதேச மத்தியஸ்தர்கள் தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே உடன்பாடு ஏற்படாததால் போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததுமே இஸ்ரேல் ராணுவம் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து முன்பே விடவும் முழு வேகத்துடன் காசாவை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

குறிப்பாக தெற்கு காசா தீவிர போர் மண்டலமாக அறிவித்து அங்கு கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அங்குள்ள கான் யூனீஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகின்றனர். இதில் அடுக்கு மாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி வருகின்றன. அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொண்டு குவிக்கப்படுகின்றனர். மூன்றாவது நாளாக நேற்று காசாவை முற்றுகையிட்டு தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை காலை போர் மீண்டும் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் இஸ்ரேலில் தாக்குதலின் 200க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இது தவிர நூற்றுக்கணக்கான படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் பல இடிபாடுகளில் புதைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.

ஆனால் இஸ்ரேல் ராணுவவமோ ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாகவும் 24 மணி நேரத்தில் ஹமாஸ் அமைப்பினரின் 400 நிலைகளை தாக்கியதாகவும் கூறியுள்ளது. இதனிடையே ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இஸ்ரேலின் தெற்கு நகரங்களை குறி வைத்து சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி வருகின்றனர். போர் மீண்டும் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 250க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் இஸ்ரேலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.