விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா??- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பதில்.

2 Min Read
விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா??- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பதில்.

கோவையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சிக்கு பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்துள்ளது. மீதமுள்ள  வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். ரஜினியுடன் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும், நடிகர் கார்த்தி கூறியது போன்று சமூகம் சார்ந்த பணிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார். மேலும்  இரும்பு கை, மாயாவி படம் தற்போதைக்கு எடுக்க முடியாது எனவும் அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.பத்து படம் முடித்துக் கொண்டு என் சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

- Advertisement -
Ad imageAd image

அண்மையில் நண்பர் விளம்பரம் செய்வதற்காக ஒரு யூனிட் செட்டப் தேவைப்பட்ட போது கோவையில் கிடைக்கவில்லை. அதனை பாலக்காட்டில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலை இருக்கிறது என்றார். வருங்காலத்தில் கோவையில் படம் பண்ணுவதற்கான நிலை வரவேண்டும் எனவும் அதற்கான முதல் கால் நான் எடுத்து வைக்க தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார்.  வங்கியில் நான்கு வருடம் வேலை செய்தேன், நமக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய வேண்டும் என்றார். அதன்படி தான் சினிமாவிற்கு வந்துள்ளேன் என கூறினார். லியோவில் அரசியல் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் இல்லை என கூறினார்.

விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா? என நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,  அரசியலை பற்றி தெரிந்தவர்கள் பேசலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை . அரை குறைவான அறிவு ஆபத்தானது என்ற பழமொழி உண்டு, ஆக எனக்கு அதைப் பற்றி எனக்கு தெரியாது என பதிலளித்தார். விஜயை நான் அண்ணன் என்று கூப்பிடுவதற்கு அவர் நல்ல மனிதர். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். விஜயுடன் மூன்றாவது படம் இணைய காத்திருக்கிறேன். கண்ணிமைத்தால் படம் செய்வேன் என்றார். சமூக நீதிச் சார்ந்த படங்கள் இயக்க எனக்கு போதிய அறிவில்லை என நினைக்கிறேன்.  சினிமாவில் 150 ரூபாய் கொடுக்கும் ரசிகரின் மரியாதை மிகப் பெரியது. நான் எடுப்பது கமர்சியல் சினிமாதான் வேற பெரிய படங்கள் எடுப்பதில்லை. ஆயிரம் கோடி வசூல் இட்டுமா என்பது கருத்தை தாண்டி எனக்கு ரசிகர் கொடுக்கக்கூடிய ஒரு 150 ரூபாய் முக்கியம்.

Share This Article
Leave a review