புதுச்சேரியில் மாமூல் கேட்டு தொழிலதிபரை மிரட்டும் நோக்கில் தொழிற்சாலை மீது நாட்டு வெடிகுண்டு வீச கூட்டாளியுடன் வந்த பிரபல ரவுடியின் காலிலேயே வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே ஊசுடு தொகுதிக்குட்பட்ட கிராம பகுதியான ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 36. அதே பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை நடத்தி வருகிறார். ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இவரை 2 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரவுடி சுகன் வயது 32. இவர் மாமூல் கேட்டு மிரட்டினார். தனியார் தொழிற்சாலை அதிபர் வெங்கடேசன் என்பவரை மாமூல் கேட்டு ரவுடியான சுகன் மிரட்டி வந்து உள்ளார். அவர் தர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ரவுடி சுகன், தனது கூட்டாளியான சென்னையை சேர்ந்த ரவுடி சரத் வயது 28 என்பவருடன், கத்தி, நாட்டு வெடிகுண்டுடன் நேற்று காலை 11:30 மணிக்கு வெங்கடேசனின் தொழிற்சாலைக்கு சென்றார்.

இந்த நிலையில் தொழிலதிபரை மிரட்டும் நோக்கில் பிரபல ரவுடியான சுகன் தனது கூட்டாளியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு வந்து, அங்கு நின்றிருந்த தொழிற்சாலை உரிமையாளர் வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டு, வாசலில் நின்றிருந்த வெங்கடேசனை,மாமூல் கேட்டால் தரமாட்டாயா எனக் கேட்டு சுகன் தாக்கினார். பின்னர், அருகில் நின்றிருந்த ரவுடி சரத்திடம் நாட்டு வெடிகுண்டை எடுக்குமுாறு கூறினார். தொடர்ந்து ரவுடி சுகன்யா கால் சட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெங்கடேசன் முயற்சி செய்தபோது, வெடிகுண்டு எதிர்பாராத விதமாக ரவுடி சுகன் காலில் விழுந்து வெடித்தது. அதில், தொழிலதிபர் வெங்கடேசன், ரவுடிகள் சுகன், சரத் ஆகியோர் காயமடைந்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் ரவுடிகள் இருவரும் தப்பிச் சென்றனர். உடனே அங்கிருந்த ஊழியர்கள் வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெங்கடேசன் மற்றும் அவனது கூட்டாளிகள் காயங்களுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

தகவலறிந்த எஸ்.பி. வம்சீதரெட்டி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு வீச்சு சம்பந்தமாக வில்லியனூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் வெடிகுண்டு மாதிரிகள் சேகரித்தனர். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு ரவுடி காலிலேயே வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீச கூட்டாளியுடன் வந்த பிரபல ரவுடியின் காலிலேயே வெடித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரவுடி சுகன் மீது கொலை, கொள்ளை ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.