லிவிங் டுகெதர் வாழ்க்கையில் பிறந்த பச்சிளம் குழந்தை கொலை..!

2 Min Read

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கே. புதுப்பட்டி அருகே உள்ள கரையப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது (34). இவர் விவசாயி. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், நம்பூரணிப்பட்டியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிவேதா திருமணம் ஆன 8 மாதத்தில் மோகன்ராஜை பிரிந்து சென்று விட்டார்.

- Advertisement -
Ad imageAd image

அவருக்கு ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. நிவேதா தற்போது சென்னை மணலியில் வசித்து வருகிறார். அவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் மோகன்ராஜ் அறந்தாங்கி அருகேயுள்ள வைரிவயல் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா (எ) செண்பகவல்லி வயது (26) என்பவருடன் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதர்) ஒன்றாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு கடந்த 32 நாட்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அறந்தாங்கி அரசு மருத்துவமனை

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி மோகன்ராஜ் தனது வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிருத்திகா வீட்டில் அறைக்குள் இருந்த கழிவறைக்கு சென்றிருந்தார். பின்னர் அறையில் இருந்த தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது கிருத்திகா வந்து பார்த்த போது தொட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை. இதுகுறித்து கணவரை எழுப்பி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடந்தது.

இதனை அடுத்து மோகன்ராஜ் உடனடியாக குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே. புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ், கிருத்திகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கொன்றதை கிருத்திகா ஒப்புகொண்டார். மோகன்ராஜ் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

புதுப்பேட்டை காவல் நிலையம்

இந்த நிலையில் எங்களுக்கு குழந்தை பிறந்ததால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றதால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று மோகன்ராஜ் என்னிடம் கூறினார். இதனை அடுத்து குழந்தையை கொன்றுவிடுவது என்று முடிவு செய்தோம். அதன்படி மோகன்ராஜ் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று என்னிடம் கொடுத்தார்.

நான் மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டேன். பின்னர் குழந்தையை யாரோ கொன்று விட்டதாக கூறி நாடகமாடினோம். இவ்வாறு கிருத்திகா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Share This Article
Leave a review