தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களில் ஆப்பிள் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக இந்தியாவில் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று டெல்லியிலும் அமைக்கப்பட உள்ளது. மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் வணிக வளாகத்தில் அமைய உள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையம் இன்று காலை 11 மணியளவில் திறக்கப்பட உள்ளது.
அதைதொடர்ந்து, வரும் 20ம் தேதியன்று டெல்லியில் மற்றொரு விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது. சாகெட் பகுதியில் உள்ள சிட்டிவாக் வணிக வளாகத்தில் தான் இந்த விற்பனை நிலையம் அமைய உள்ளது.
விற்பனை நிலையங்களை திறப்பதன் மூலம், ஆப்பிள் சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, ஆப்பிள் சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.