இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்காண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஜானி கிரேவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்துள்ளோம். இதனை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம். குறிப்பாக குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் 100 ஆவது டெஸ்ட் போட்டி விளையாடப்படவுள்ளது. இதனை நாங்கள் உற்சாகத்துடன் கொண்டாடவுள்ளோம். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம். போட்டியைக் காண வருமாறு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அமெரிக்க ரசிர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். மொத்தம் 18 நாட்கள் ஆட்டம் நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகள்-
- முதல் டெஸ்ட் ஜூலை 12 முதல் 16 வரை – விண்ட்சோர் பார்க், டொமினிகா (இந்திய நேரப்படி இரவு 7.30)
- இரண்டாவது டெஸ்ட் ஜூலை 20-24 குயின்ஸ் பார்க், டிரினிடாட் (இரவு 7.30)
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முதல் ஒருநாள் போட்டி ஜூலை 27 – கென்சிங்ஸ்டோன் ஓவல், பார்படாஸ் (இரவு 7 மணி)
2ஆவது ஒருநாள் போட்டி ஜூலை 29 – கென்சிங்ஸ்டன் ஓவல், பார்படாஸ் (இரவு 7 மணி)
3ஆவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1 – பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் (இரவு 7 மணி)
டி20 கிரிக்கெட் தொடர்
1வது T20I: ஆகஸ்ட் 3 – பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் (இரவு 8:00 IST)
2வது T20I: ஆகஸ்ட் 6 – நேஷனல் ஸ்டேடியம், கயானா (இரவு 8:00 மணி IST)
3வது T20I: ஆகஸ்ட் 8 – நேஷனல் ஸ்டேடியம், கயானா (இரவு 8:00 IST)
4வது T20I: ஆகஸ்ட் 12 – ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், புளோரிடா (இரவு 8:00 IST)