இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு ?

2 Min Read
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி.  சில வருடங்களுக்கு முன்னர் ஹாசினி ஜஹான் என்ற பெண்ணை மணந்தார்  ஷமி . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது . மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கருத்துவேறுபாடு நிலவி வருவதால் , ஷமி மீது அவரது மனைவி ஹாசினி ஜஹான் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார் .

- Advertisement -
Ad imageAd image

ஷமி தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருவதாக கூறிய ஹாசினி , தன்னை கண்மூடி தனமாக தாக்கி குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்திருந்தார் . இது தொடர்பாக காவல் நிலையங்களிலும் அவரது தரப்பில் புகார் தெரிவிக்க பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது .

என்னினும் அவரது மனைவின் அணைத்து புகார்களுக்கும் ஷமி மறுப்பு தெரிவித்து வந்தார் . இந்தநிலையில் கடந்த 2018 ம் ஆண்டில் தனக்கு ஷமியுடன் விவாகரத்து கூறி ஹாசினி தொடர்ந்த வழக்கு கொல்கத்தா குடும்ப நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது .

இந்நிலையில் ஹாசினி , ஷமி மீது பல்வேறு புதிய புகார்களை தெரிவித்து தனக்கு நீதி வழங்க கூறி உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் . அந்த புகாரில் ஷமி தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது மட்டும் இல்லாமல் பல பெண் பாலியல் தொழிலார்களுடன் கள்ள உறவில் இருந்து வருவதாக திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார் .

பாலியல் தொழிலாளர்களை தொடர்பு கொண்டு பேச தனி மொபைல் போன் மற்றும் எண்ணை வைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் ,  கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சக அணி வீரர்களுடன் வெளிமாநிலம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்யும் போதும் இந்த அழகிகளை அவருடன் கூடி சென்று BCCI அவருக்காக ஒதுக்கிய அறையிலேயே அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக அவர் மீது குற்றசாட்டை எழுப்பியுள்ளார் .

இது குறித்த விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க படுகின்றது .

Share This Article
Leave a review