உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதித்த பிரதமர், இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய நடவடிக்கைகளை முன்னோக்கி செல்ல அழைப்பு விடுத்தார்.

ஜெலன்ஸ்கி என்று அவர் எடுத்துரைத்தார். அமைதியான தீர்வுக்கு ஆதரவாக இந்தியா தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார்.
உக்ரைன் மக்களுக்காக இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதை அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டினார்.