உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஜெர்மனி அணியிடம் இந்தியா போராடி தோல்வி..!

2 Min Read

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 3-4 என்ற கோள்கணக்கில் ஜெர்மனியிடம் விழுந்தது.

- Advertisement -
Ad imageAd image

பத்தாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சாந்தியா கோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்புச் சாம்பியன் நெதர்லாந்து முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா ஜெர்மனி மற்றும் இந்தியா உள்பட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். இதில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று முன்திறம் நள்ளிரவு நடந்த தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் கடந்த முறை இரண்டாவது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதியது.

ஜெர்மனி அணியிடம் இந்தியா போராடி தோல்வி

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் அன்னு 11வது நிமிடத்திலும், ரோப்னி குமாரி 14வது நிமிடத்திலும், அடித்த கோலால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெர்மனி வீராங்கனைகள் சோபியா 17-வது நிமிடத்திலும், லாரா புத் 21வது நிமிடத்திலும், பதில் கோல் திருப்பி சமநிலையை உருவாக்கினார். 24 ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் அடித்த கோளால் மீண்டும் இந்தியா முன்னிலையில் தனதாக்கியது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி அணி அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்தது.

அந்த அணியின் லாரா புத் (36-வது நிமிடம்) கரோலின் (38வது நிமிடம்) ஆகியோர் இந்த கோலை அடித்தனர். அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோலடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி ஜெர்மனிடம் விழுந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (0-6) தோற்று இருந்தது.

ஜெர்மனி அணியிடம் இந்தியா போராடி தோல்வி

முதலாவது ஆட்டத்தில் கன்னடாவை எளிதில் (12-0) தோற்கடித்து இருந்த இந்தியா அணிக்கு இது முதல் தோல்வியாகும். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவின், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில், நியூசிலாந்தையும், அமெரிக்கா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்தன.

Share This Article
Leave a review