- பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் டக் அவுட்டாகியும், ரோஹித் சர்மா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதும் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதுமட்டுமல்லாமல் போட்டியை தொடங்குவதற்கு முன்பாக லைட்ஸ் ஆன் செய்யப்பட்டது.
இதனால் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி மற்றும் ஹென்ரி இருவரின் பந்துகளும் நிச்சயம் ஸ்விங்காகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் ஒரு மணி நேரத்திற்கு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தாக்கு பிடித்தால், பின்னர் எளிதாக ரன்கள் சேர்க்க முடியும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இதன்பின் கேப்டன் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சவுதி மற்றும் ஹென்ரி இருவரும் பவுண்டரி கொடுக்காமல் அட்டகாசமான ஸ்பெல்லை வீசினார். ஒரு கட்டத்தில் டென்ஷனான ரோஹித் சர்மா, டிம் சவுதியின் பந்தை டன் தி டிராக் இறங்கி வந்து பவுண்டரி அடிக்க முயன்றார். ஆனால் அந்து பந்து கொஞ்சமாக இன் ஸ்விங்காகி ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் நம்பர் 3 வரிசையில் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கினார். நம்பர் 3ல் விராட் கோலி அந்த அளவிற்கு சிறப்பாக விளையாடியதில்லை. இருந்தாலும் பெங்களூர் மைதானம் என்பதால், என்ன செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லெக் கல்லியில் ஃபீல்டரை நிறுத்தி கொஞ்சம் ஆஃப் ஸ்டம்ப் லைனில் கூடுதல் பவுன்ஸ் உடன் ஓரூர்க் பந்துவீசினார்.
அதனை தடுக்க நினைத்து பேட்டை விட்ட விராட் கோலி, நியூசிலாந்து அணியின் திட்டத்திற்கு பலியானார். லெக் கல்லியில் நின்றிருந்த கிளென் ஃபிலிப்ஸ் அட்டகாசமாக டைவ் அடித்து கேட்ச் பிடிக்க, விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் பெங்களூர் மைதானம் மயான அமைதியானது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/jail-for-the-indian-who-spent-it-several-lakhs-mistakenly-credited-to-a-bank-account-in-singapore/
இதன்பின் நம்பர் 4ல் வந்த சர்ஃபராஸ் கான் அட்டாக் செய்ய முயன்று டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பவுலிங்கிற்கு சாதகமாக சூழல் இருந்த போதும், 4வது இன்னிங்ஸை கணக்கில் கொண்டு இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. அதேபோல் பேட்டிங் வரிசையை மாற்றி களமிறக்கியதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.