ராணிப்பேட்டையில், தி.மு.க மாணவரணி சார்பில் நடைபெற்ற ‘மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில், கைத்தறித்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அமைச்சர் பேசும்போது;-
ஓர் இடத்தில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பது, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், அமைச்சரின் பேச்சு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பேச்சுக்கான காரணத்தைக் கண்டறிய, நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிய முழுக் காணொளியையும் பார்வையிட்டோம். 1967-ல் இருந்து கட்சியில் இருக்கிறேன். ஆனால், எந்தப் பொறுப்புக்கும் நான் வரவில்லை. 1991-ல் ஜெயிலில் போட்ட பிறகுதான் 1996-ல் சட்டமன்ற உறுப்பினராகிறேன். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், தி.மு.க சாதாரண கட்சி கிடையாது.

நான் இந்த ஊருக்கு 1963-ல் வியாபாரம் செய்ய வந்தவன். தி.மு.க என்ற மூன்றெழுத்து தான் எனக்கு அடையாளம் கொடுத்தது. ஆனால், இன்னொருத்தரைப் பற்றி நாம் பேசவே கூடாது. நம் வேலையை செய்து கொண்டே போகணும். தெருவில் போகும் போது, நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா.. அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆகிடுவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய வைக்காதீர்கள்.
இதனால் பேச்சாளர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அப்போது வீணாக எதையும் பேசாதீர்கள். நம் சாதனையைச் சொன்னாலே போதும். 90 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நம்முடைய ஆட்சிதான். மகளிர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களின் ஓட்டு நமக்குத்தான். ஆண்கள் அனைவரும் காலையில் ஒரு மாதிரி, மதியம் ஒரு மாதிரி, மாலையில் ஒரு மாதிரி இருப்பார்கள்.

அதேபோல, ‘நாம் செய்வது யாருக்கும் தெரியாது’ என்று நினைக்கக் கூடாது. எல்லாம் ஓப்பன் சீக்ரெட் தான். அதனால், யாரோ மைக் பிடித்து பேசிவிட்டால், அவர் யாரென்று மக்களுக்குத் தெரியாதா… மக்கள் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால், எழுந்துச் செல்லும்போதுதான், ‘வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறான்.
இவன் செய்வதெல்லாம் இப்படி’ என்று பேசுவார்கள்’’ என்றபோதுதான், அந்த வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார் எனத் தெரிகிறது. தனி நபர் யாரையும் குறிப்பிட்டுத் திட்டுவதற்காகவும் அப்படி பேசவில்லை. அமைச்சர் குறித்து யாரும் தவறாக வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’’ என ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.