- திருவையாறு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த 23 சவரன் தங்க நகைகள். 3லட்சம் ரூபாய் ரொக்கபணம் உள்பட வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதம் அடைந்தன.
திருவையாறு பங்களா தெருவில் வசித்து வருபவர் ஜெயராணி.
கணவரை இழந்த இவர் மகனுடன் வசித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் மகனுக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், இன்று மகன் மருமகள் ஆகியோருடன் சேர்ந்து ஜெயராணி குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருநள்ளார் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று உள்ளார். இந்நிலையில் பூட்டி இருந்த புகை வெளிவந்துள்ளது.சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் வீட்டில் இருந்த சீர்வரிசை பொருட்கள், நகைகள், பணம் ஆகிய அனைத்து பொருட்களும் முற்றிலுமாக எரிந்து கருகி சேதம் அடைந்தன.