புதுச்சேரி மாநிலத்தில் 100 அடி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் காதல் ஜோடி தங்கி இருந்த அறையில் ரகசிய கேமரா இருப்பது தெறியவந்தது.
இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேமரா பொருத்த உடந்தையாக இருந்த விடுதி ஊழியர் நைனார் மண்டபம் இருதயராஜ் வயது 69, லைசென்ஸ் உரிமையாளர் கம்ப நகர் இளைய ஆழ்வார் வயது 45, ஆகியோர் உடனே கைது செய்யப்பட்டார். இருப்பினும் முக்கிய குற்றவாளிகளான விடுதி மேலாளர் தேங்காய் திட்டு ஆனந்த் வயது 25, ஊழியர் அரியாங்குப்பம் ஓடைவெளி ஆபிரகாம் வயது 22 ஆகிய இருவரும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் 4 மாதங்களுக்கு மேலாக பதுங்கி இருந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அவர்களை கோவா வாஸ்கோடகாமாவில் தனிப்படை கடந்த மாத இறுதியில் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆனந்த், ஆபிரகாம் என இருவரையும் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் 3 நாள் காவலில் நேற்று எடுத்தனர். புதுச்சேரி மாநில மாஜிஸ்திரேட் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில், இரண்டு பேரையும் பாதுகாப்புடன் காவலில் எடுத்த போலீசார் அவர்களை சம்பவம் நடந்த விடுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரகசிய கேமரா பொருத்த உடந்தையாக இருந்தவர்கள் யார்? ஏற்கனவே காதல் ஜோடிகள் இதுபோன்ற ரகசிய படம் பிடிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர். மூன்று நாள் காவல் விசாரணை முடிந்து 14 ஆம் தேதி இருவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.