டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் நாளை விவசாயிகள் ரயில் மறியல் நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020 – 2021-ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து, மீண்டும் போராட்டம் நடத்த 1 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்ததால் தலைநகர் டெல்லி குலுங்கியது.

அப்போது தடைகளை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது டிரோன் மூலம் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் டெல்லி எல்லை பகுதிகள் போர்க்களமாக மாறின. பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது இன்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு வருகிறது.

அப்போது அடுத்தடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்படுவதால் பஞ்சாப் – அரியானா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொடூரமான அடக்குமுறையை ஒன்றிய அரசு ஏவுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதை அரசை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல, கோரிக்கையை வலியுறுத்தவே போராட்டம். அமைதியாக போராட்டம் நடத்தச் செல்லும் விவசாயிகள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஒன்றிய அரசு அறிவித்தது. அப்போது பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு விவசாய சங்கங்களுக்கு அமைச்சர் முண்டா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் விவசாயிகளுடனான பேச்சு வார்த்தையை போராட்ட இடத்திலோ அல்லது சண்டிகரில் நடந்த வேண்டுமென விவசாயிகள் நிபந்தனை விதித்துள்ளனர். அப்போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “டெல்லி சலோ” என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழக வாழ்வுறிமை கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

அப்போது கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.