பொள்ளாச்சியில் வெயில் தாக்கம் குறையா தலையில் இலை தலைகள் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி.

கோவை மாவட்டம், அடுத்த பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. பொதுமக்கள் தண்ணீர் அதிக அளவில் பருக வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

இதை அடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம் தலை மற்றும் புங்க மரம் தலைகள் கொண்டு தலையில் கட்டிக்கொண்டு பொள்ளாச்சி பாலக்காடு சாலை கோவை சாலை வால்பாறை சாலை வழியாக பொது மக்களுக்கு மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றைய தலைமுறைகள் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மரங்கள் வளர்ந்தால் மழை வரும். விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலையில் செடிகள் வைத்து பொதுமக்கள் மத்தியில் செல்லும் போது ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.