விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா கேரளா செண்டை மேளம்,நாதஸ்வர மேளத்தாள மங்கள இசையுடன் கோபுர விமான கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு சிறப்பாக நடந்தேறியது.
கீழம்பி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று ஸ்ரீவிக்ர விநாயகரை சாமி தரிசனம் செய்து வழிபாடு.
காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி ஊராட்சியில் அமைந்துள்ளஸ்ரீ விக்ர விநாயகர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி முதல் கால யாகசாலை பூஜை மற்றும் வேத பாராயணம்,பூர்ணாகுதி,லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு மகா தீபாராதனை காண்பித்து,கேரளா செண்டை மேளம்,நாதஸ்வர மேளத்தாள மங்கள இசையுடன் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் புறப்பாடாகி,கோபுர விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழாவானது வெகு விமரிசையாக நடந்தேறியது.அதன் பின் அங்கு கூடியிருந்த பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ விக்ர விநாயகருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டும்,பால் ஊற்றியும் சிறப்பு அபிஷேக ஆராதணைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நவகிரகங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
மேலும் ஸ்ரீ விக்ர விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு,திவ்ய அலங்காரத்தில் ஸ்ரீ விக்ர விநாயகர்பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீ விக்ர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழாவில் கீழம்பி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று ஸ்ரீ விக்ர விநாயகரை சாமி தரிசனம் செய்து வழிபட்டு அருள் பெற்று சென்றனர். மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
ஸ்ரீ விக்ர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பணி குழுவினர், கிராம நாட்டாமைக்காரர்கள் வெகு சிறபாக செய்திருந்தனர்.