பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் சட்ட விரோதமான ஆயுதங்கள் பறிமுதல்..!

2 Min Read

நெல்லை மாவட்டம் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தியதில் மான் கொம்பு ,அரிவாள், துப்பாக்கியில் மாட்டும் பைனாகுலர், துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் கடந்த 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள சாமிதுரை கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராக்கெட் ராஜா வீட்டில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்

குறிப்பாக அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது. அவர் தற்பொழுது ஜாமினில் வந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தாழையுத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ வயது (27) சிறையில் கைதியாக இருந்த ஒரு கும்பல் சிறைக்குள்ளையே கற்களாலும் கம்பிகளாலும் தாக்கியதில் முத்துமனோ உயிர் இழந்தார்.

இது சம்பந்தமாக சிறையில் இருந்த தாழையுத்துவை சேர்ந்த ஜேக்கப் வயது (29), மகேஷ் வயது (25), ராம் வயது (24), மகாராஜா வயது (28), சந்தன மாரிமுத்து வயது (22), கனக சாமி வயது (22), அருள் வயது (22), ஆகிய ஏழு பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஜெய்லர் துணை ஜெயிலர் தலைமை வார்டன் சிறை காவலர் உள்ளிட்ட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் இந்த வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி, துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

இந்த நிலையில் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் கொலை செய்யப்பட்ட சாமிதுரை கொலை வழக்கிலும் ஜேக்கப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஜேக்கப்பை போலீசார் பிடித்து அவரை விசாரிக்கும் பொழுது நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவர் வீட்டில் ஆயுதங்கள் தனக்கு கிடைத்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இன்று காவல்துறையினர் ஆனைகுடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் மான் கொம்பு, அரிவாள் துப்பாக்கி , துப்பாக்கியில் மாட்டக்கூடிய பைனாக்குலர் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது.

நாங்குநேரி அருகே பஞ்சாங்களத்தில் சாமித்துறை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா கடந்த 2023 ஜூலை 21ஆம் தேதி தான் விடுதலை செய்யப்பட்டார். இந்த சாமித்துரை கொலை வழக்கில் தாழையூயத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

Share This Article
Leave a review