விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் இப்ராகிம் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி பேசும்போது இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை. அரேபியாவிற்கு பல பேர் போயிருக்கவே மாட்டார்கள். இங்கிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் சனாதனக் கொள்கை, இந்து மதத்தில் இருக்கின்ற சாதியை வேறுபாடு காரணமாக இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருக்கின்றார்கள். மற்றபடி நாமெல்லாம் ஒன்றுதான். பாஜக ஆட்சியில் மதவெறியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கின்ற போது இஸ்லாமியர்களுக்கு கொடுத்திருக்கின்ற நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றம் இது எல்லாம் நிறுத்தக்கூடாது கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார். இந்து முஸ்லிம் இடையே மத வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக என்று மீண்டும் அவர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.