எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை வேணும் இல்லன்னா செத்துருவோம் – மது பிரியர்கள்..!

2 Min Read
எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை வேணும் இல்லன்னா செத்துருவோம் மது பிரியர்கள்

மது பிரியர்கள் எங்களுக்கு எங்க ஊரிலேயே மது டாஸ்மாக் கடை வேணும் இல்லன்னா செத்துருவோம். எங்க ஊரிலேயே மது குடிச்சிட்டு படுத்துட்டன்னா பொண்டாட்டி, இல்லையென புள்ளைங்க வந்து தூக்கிட்டு போய்டுவாங்க.வெளியூர்ன்னா போய்விட்டால் சிரமமா இருக்கும். ஆற்காடு கிராமத்தில் மது டாஸ்மாக் கடை வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த மது பிரியர்கள்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூர் கிராமத்தை அடுத்து உள்ள கிராமம் ஆற்காடு. இந்த கிராமத்தில் மது டாஸ்மாக் கடை இல்லை என கூறி வந்த கிராம மதுப்பிரியர்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆற்காடு கிராமத்தில் மது டாஸ்மாக் கடை வேண்டும் என்ற கோரிக்கை புகார் மனுவை அளித்தனர். அப்போது பேசிய மது பிரியர்கள் “எங்க ஊரில் நாலு பொம்பளைங்க மது கடையை வேண்டாம் என்று சொல்றாங்கன்னு அரசாங்கம் டாஸ்மாக் கடை கொண்டு வர மாட்டார்கள்.

எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை வேணும் இல்லன்னா செத்துருவோம் என மது பிரியர்கள்

எங்க ஊரில் நாங்கள் எங்கன்னா வேலை செஞ்சிட்டு, வர எங்களுக்கு உடம்பு வலிக்கு ஒரு டாஸ்மாக் கடை வேணும். இல்லன்னா நாங்க ஏழு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஆயந்தூர் மது டாஸ்மாக் கடைக்கு தான் போகணும். அங்கு சிலர் எங்களை வழி மறித்து பணம் கேட்டு அடிக்கிறாங்க. அதனால எங்க ஊரிலேயே மது டாஸ்மாக் கடை வேணும். 7 கிலோமீட்டர் போக முடியலன்னா உள்ளூரிலேயே மது சரக்கு பிளாக்ல விற்பனை செய்றாங்க. மது சரக்கு 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதா இருக்கு.

ஆற்காடு கிராமத்தில் மது டாஸ்மாக் கடை வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த மது பிரியர்கள்

நாங்கள் ஒரு நாளைக்கு வேலைக்கு போனால் 400 ரூபாய் தான் சம்பாதிக்கிறோம். இரண்டு சரக்கு பாட்டில் வாங்கி விட்டால் குடும்பத்துக்கு எப்படி காசு கொடுக்க முடியும். அதுவும் இல்லாம வெளியூர்ல போய் மது சரக்கு குடிச்சிட்டு போய் படுத்துட்டா எங்களை யாருக்கும் தெரியாது. இதுவே உள் ஊர்லனா எங்க பிள்ளைங்க இல்லையென பொண்டாட்டி வந்து எங்களை தூக்கிட்டு போவாங்க. எங்களுடைய நிலைமை புரிஞ்சிக்கின்னு எங்க ஊரிலேயே மது டாஸ்மாக் கடை அமைக்கவும்” அப்படின்னு மாவட்ட கலெக்டர் கிட்ட புகார்மனு கொடுத்திருக்கிறோம் என்றார் மது பிரியர்கள்.இச்சம்பவம் அவ்ஊரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review