நலமுடன் வருவேன் மருத்துவமனையில் இருந்து வைகோ வீடியோ பதிவு

1 Min Read
vaiko

தவறி விழுந்துவிட்டேன்

- Advertisement -
Ad imageAd image

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 7,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டில் தவறி விழுந்துவிட்டேன்- மருத்துவ மனையில் இருந்து வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்ற போது வீட்டில் கால் தடுமாறி விழுந்தல் அவரது வலது தோள்பட்டையில எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிக்சை செய்ய உள்ளனர்.

சென்னையில் சிகிச்சை

இந்நிலையில், தாம் நன்றாக இருப்பதாகவும், முழு ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன் என்று கூறி மருத்துவமனையில் இருந்தவாறு வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே, தமிழகத்தில் பொது ஊழியம் செய்கிற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்னால் நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன்.

அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகெலும்பில் அடிபட்டிருந்தாலோ நான் இயங்க முடியாமல் போயிருப்பேன். இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க அவர்கள் உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

நன்றாக இருக்கிறேன்

பயப்பட வேண்டாம் உங்களுக்கு ரெஸ்ட் தேவை என்று சொன்னார்கள். தோள்பட்டை விலகி இருப்பதற்கும், எலும்பு 2 சென்டிமீட்டர் உடைந்திருப்பதற்கும் சேர்த்து அறுவை சிகிக்சை செய்யப்பட உள்ளது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். முழு நலத்தோடு, ஆரோக்கியத்தோடு வருவேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a review