அதிமுகவில் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை – டிடிவி தினகரன் உறுதி..!

1 Min Read

அதிமுகவில் இணையும் எண்ணமே தனக்கு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி;-

- Advertisement -
Ad imageAd image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

அமமுக

அதிமுக 13 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. மாறாக பல்வேறு பொய் தகவல்களை பரப்பி வாக்கு சதவீதம் சரியவில்லை என கூறி வருகின்றனர். இதை யாரும் நம்பமாட்டார்கள். இரட்டை இலை சின்னம் இருந்தும் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தலைமை சரியில்லாததே இதற்கு காரணம். தாங்கள் தான் எல்லாம் என்ற நினைப்போடு அதி‌முகவில் சிலர், சுயநலத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை.

அதிமுக

எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக படுதோல்வியை கண்டுள்ளது. சிலர் தங்களது தவறை உணர்ந்து திருந்தினால் தான் அதிமுக பலப்படும்.

உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அதிமுகவின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுயநலவாதிகள் கைக்கு போய்விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அமமுக தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அதிமுகவுடன் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a review