கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் நடிகரும்,
நடனம் மாஸ்டர்ருமான லாரன்ஸ் அவர்கள் மாற்றம் உங்கள் சேவை அமைப்பில் பாலா அவர்கள் இணைந்து சேவை செய்ய போவதாக கூறினார்.

அதை வரவேற்கும் விதமாகவும், லாரன்ஸ், KPY பாலா இருவரும் உதவுவதற்காக இணைந்த கைகளான என்பதை குறிக்கும் விதமாக “KPY பாலா போட்டோவாலேயே” நடிகர் லாரன்ஸ் படத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த ஓவியத்தை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த KPY பாலா அவர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேற லெவல்ல வரைந்து இருக்கிறீங்க என்றும்,

ஐ லவ் யூ பிரதர்.. ஐ லவ் யூ.. தேங்க்யூ என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார் சின்னத்திரை நடிகர் பாலா.