வயநாடு தொகுதியை தனது வீடு போல உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அந்த தொகுதியுடன் கேரளாவில் வயநாட்டிலும் போட்டியிட்டார். இதில் அமேதியில் தோல்வி அடைந்த அவர் வயநாடு தொகுதியில் அவ்வாறு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து வயநாட்டில் அப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் மக்கள் குறைகளில் கேட்டு வருகிறார். அந்த ஆண்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யுகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று வயநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரும் பேசினார்.

மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் சீதி ஹாஜி குறித்த புத்தகம் ஒன்றே வயநாட்டில் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது வயநாடு குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் கூறும் போது கேரளாவுக்கும், வயநாட்டுக்கும் வருவது எனக்கு ஒரு வேலையாக தெரியவில்லை. எனது குடும்பத்துக்கு திரும்பி வந்து உறவுகளையும், நண்பர்களையும் பார்ப்பது போலவே கருதுகிறேன். கேரள மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ அவ்வளவு அதிகமாக அது என் வீடு என்று உணர்கிறேன் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் வயநாடு குறித்த ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கள் அவர் மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவதற்கான அச்சாரமாகவே கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியின் உரையை முஸ்லிம் லீக் எம்.பி அப்துல் சமாதி சமதானி மொழிபெயர்த்தார். அவரது மொழி பெயர்ப்பை பாராட்டிய ராகுல் காந்தி தெலுங்கானாவில் தனது உரையை மொழி பெயர்த்தவர் குறித்த நகைச்சுவை ஒன்றையும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சிரித்தவரை கூறியதாவது; எனது உரைக்கு மொழிபெயர்ப்பாளராக இருப்பது ஆபத்தான வேலையாகவும் இருக்கலாம். தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரையை மொழி பெயர்த்தவர் அத்தகைய சிக்கலை சந்தித்தார். அதாவது நான் ஒன்றை சொல்ல, அவர் வேறு வேறோன்றை கூறினார். தொடர்ந்து இவ்வாறு நடந்ததால் நான் என் வார்த்தைகளை எண்ண ஆரம்பித்தேன். இந்தியில் 5 வார்த்தைகள் சொன்னால் தெலுங்கில் 5 அல்லது 7 வார்த்தைகள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அவர் 20 முதல் 30 வார்த்தைகள் வரை பேசுவார். பின்னர் சில நேரங்களில் நான் மிகவும் சலிப்பாக எதையாவது கூறுவேன் கூட்டம் மிகவும் உற்சாகமாக குதிக்கும். அப்போது நான் பரபரப்பான ஒன்றை சொல்வேன். கூட்டம் அமைதியாக இருக்கும். அதே சமயம் என்னால் கோபப்படவும் முடியாது. எனவே நான் எப்போதும் சிரிக்க வேண்டும், எவ்வாறு நகைச்சுவையாக கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் மலபுரத்தில் வலி மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்துகு ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினா. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் சுகாதார திட்டத்தை பாராட்டினார். நோய் தடுப்பு பராமரிப்பில் நாட்டிலேயே கேரளா முன்னோடியாக திகழ்வதாக கூறிய அவர், உடல்நலம் மற்றும் நோய் தடுப்பு சிகிச்சையை இது வழி நடத்துகிறது. என்றும் தெரிவித்தார்.