இந்தியளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி. இவர் கமலின் நம்மவர் படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டது பற்றியும் அந்த ஆடிஷனில் தான் நிராகரிக்கப்பட்டது பற்றியும் பேசியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று மக்கள் கொண்டாடும் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார்.
ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 3 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படி மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வரும் இவர் இளம் வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாராம்.

தான் 11ம் வகுப்பு படிக்கும் போது உலக நாயகன் கமல்ஹாசனின் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளாராம் . ஆனால் விஜய் சேதுபதி முகம் அப்போது பார்க்க குழந்தை போல இருந்ததாக சொல்லி படக்குழு அவரை நிராகரித்துவிட்டார்களாம்.
இந்த தகவலை விஜய் சேதுபதியே ஒரு பேட்டியில் நகைச்சுவையாக கூறி இருக்கிறார். அதற்கு பழிக்கு பலி வாங்கும் வகையில் தான் விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

ஹீரோவாக மட்டுமே தான் நடிப்பேன் என இல்லாமல் எந்த காப்பாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிக்கக்கூடிய நடிகர் தான் விஜய் சேதுபதி.
சிறு சிறு கதாபாத்திரங்களிலும், ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகவும் நடித்து வந்த விஜய் சேதுபதி இன்று இந்தியளவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியின் பத்து வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

துபாயில் வேலை செய்து வந்த விஜய் சேதுபதி நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் முயற்சிக்க துவங்கினார். 2000 ஆம் ஆண்டு முதல் பல தயாரிப்பு நிறுவனங்களிடமும், இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டு வந்த விஜய் சேதுபதி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.