அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை சட்லஜ் ஆற்றில் இந்திய கடற்படையினர் தேடி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவருடைய மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. தனது தந்தை நடத்தி வரும் மனிதநேய ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். மேலும் சினிமா படங்களையும் அவர் இயக்கி வருகிறார். இவர் த்ரில்லர் படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். இதற்காக சிம்லா, லடாக் பகுதிகளில் லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர் கோபிநாத்துடன் சென்றிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக வாடகை காரில் வெற்றியும், கோபிநாத்தும் சென்றுக் கொண்டிருந்தனர். காரை டென்சின் இயக்கினார். இந்த நிலையில் கார் ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கார் தாறுமாறாக ஓடியது. உடனே அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை மீட்ட போது அதில் டென்சின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் இரு நாட்கள் காத்திருக்குமாறு பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமியின் மகன், சட்லஜ் நதி வழியாக காரில் சென்றபோது விபத்துக்குளான நிலையில், நதியில் இருந்து ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கார் சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் வெற்றி துரைசாமி மாயானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனிடையே சில இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறிய இமாச்சலப் பிரதேச காவல்துறை வெற்றி துரைசாமி குறித்து, தகவல் அறிய 2 நாளாகும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேடுதலில் ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டி.என்.ஏ. டெஸ்ட் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.