புதுடெல்லியில் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழையும் திட்டத்தை அரங்கேறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நாடாளுமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பயங்கரவாதிகனால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. நாட்டுக்காக உயிர் நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. அப்போது பார்வையாளர் மாடத்திலிருந்து 2 பேர் நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி குதித்தனர். அவர்கள் இருவரும் தங்கள் கைகளில் இருந்த வண்ணப் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.பி.க்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் இருவரும் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அதே நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் வெளிப்பகுதியில் பெண் உட்பட 2 பேர் வண்ணப் புகை குண்டுகளை வீசினர். அவர்களின் போலீசார் பிடித்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், அவர்கள் 4 பேரையும் டெல்லி போலீசார் வசம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் முக்கிய உத்திரபிரதேச மாநிலம், லக்னாவை சேர்ந்த சாகர் சர்மா வயது 26. கர்நாடகா மாநிலம், மைசூர்வை சேர்ந்த மனோரஞ்சன் வயது 34 என்பது நாடாளுமன்றத்திற்கு வெளியே பிடிபட்டார்கள் அரியானா மாநிலம், ஹிசாரை சேர்ந்த நீலம்தேவி வயது 37. மராட்டிய மாநிலம், லத்துரை சேர்ந்த அமோல் ஹிண்டே வயது 25 என்பதும் தெரியவந்தது. நீண்ட நேர விசாரணைக்கு பின்னர், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் மட்டும் என்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உபா கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் உயர் பாதுகாப்பில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து, இந்தத் திட்டத்தை அரங்கேற்றியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றி விவரம் பின்வருமாறு; கைதானவர்களில் மனோரஞ்சன் என்ஜினீயர், சாகர் சர்மா ஆட்டோ டிரைவர் இவர்கள் இருவரும் பகத்சிங் கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த லலித் ஜா என்பவர் உருவாக்கிய பகத்சிங் பெயரில் முகநூல் பக்கத்தில் இணைந்து, அதில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்த முகநூல் பக்கத்தில் நீலம்தேவி மற்றும் அமோல் ஹிண்டே ஆகியோரும் இணைந்தனர். சமூக ஊடங்களில் தொடர்பில் இருந்த இவர்கள் அனைவரும் முகநூல் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் லலித் ஜா, சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் மைசூருவில் சந்தித்தனர். அப்போது அவர்கள் நாட்டின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய திட்டமிட்டனர்.

பின்னர் தங்களது திட்டத்தில் நீலம்தேவியும் மற்றும் அமோல் ஹிண்டேவையும் இணைந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது லலித் ஜா ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சென்ற மனோரஞ்சன் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற பாதுகாப்பு முறைகளை கேட்டு தெரிந்து கொண்ட அவர், நாடாளுமன்றத்தில் காலணிகளை சோதனை இடுவது இல்லை என்பதையும் தெரிந்து கொண்டார். அதே நேரம் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் என்று ஒருவரின் அனுமதி சீட்டு பெற வேண்டும் என்பதே அறிந்த மனோரஞ்சன் தனது தொகுதி பாரதிய ஜனதா எம்.பி ஆன பிரதாப் சிம்ஹாவிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழக்கத்தை ஏற்படுத்தினர். இதையடுத்து சாகர் சர்மாவை தனது நண்பர் என்று எம்.பி-விடம் மனோரஞ்சன் அறிமுகப்படுத்தினார். பின்னர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டு அவரிடம் தங்கள் இருவருக்கும் அனுமதி சீட்டைப் பெற்றார். மனோரஞ்சன் எல்லாம் தங்களது திட்டப்படி நடந்ததும் லலித் ஜா உள்ளிட்ட ஐந்து பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி அருகே உள்ள குருகிராம் வந்தனர்.

அங்கு அவர்கள் தங்களது நண்பரான விஷால் சர்மாவின் வீட்டில் தங்கினார். அங்கும் அவர்கள் தங்களது திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் வண்ணப் புகை குண்டுகுப்பிகளை வாங்கினர். சிறிய அளவில் இருந்த அதனை தங்களது காலனிக்குள் மறைத்து வைத்தனர். பின்னர் 5 பெரும் நாடாளுமன்ற கட்டிட வளாகத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். எம்.பி அனுமதி சீட்டு இருந்ததால் சாகர் சர்மாவும், மனோரஞ்சனும் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்குள் சென்றனர். அங்கு காலணிகள் சோதனை செய்யப்படாததால், அவர்கள் இருவரும் பார்வையாளர்கள் மாடத்துக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் தங்கள் திட்டத்தை அரங்கேற்றினர். அதே நேரத்தில் நீலம்தேவியும் அமோல் ஹிண்டேவும் இது போன்ற குப்பிகளில் இருந்து வாயுவை வெளியேற்றி பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் இருந்த லலித் அதனை வீடியோ எடுத்தார்.

அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே அவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த விஷால் சர்மாவையும், அவரது மனைவியையும் குருகிராமில் போலீசார் கைது செய்தனர். கைதான சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம்தேவி, அமோல் ஹிண்டே ஆகியோர் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஹர்தீப் கவுர் முன்னிலையில், நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவர்கள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.