உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பி …

The News Collect
3 Min Read
  • உலகமே ஒரு தேர்தலை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், அது அமெரிக்க அதிபர் தேர்தல் தான். ஏற்கனவே துணை அதிபராக இருக்கக்கூடிய கமலா ஹாரிஸ் அதிபராக வேண்டும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டு தனது 60-வது வயதில் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அதேபோல 78 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் ஒரு பக்கம் பரப்பான பிரச்சாரங்களைச் செய்தார்.

நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்திருக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பை விட கூடுதல் வாக்குகளை ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் பெறுவார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தாலும், வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். கமலா ஹாரிஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்ற நிலையே நிலவுகிறது.

- Advertisement -
Ad imageAd image

டொனால்ட் டிரம்ப் கோல்ப் மைதானங்கள் முதல் ஹோட்டல்கள் வரை தனது ரியல் எஸ்டேட் மூலம் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இந்த ஆண்டு டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுமத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்ததால் டொனால்ட் டிரம்ப்பின் நிகர மதிப்பு 5.5 பில்லியன் டாலராக சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் டிரம்ப் மீடியாவின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட ஆரம்ப உயர்வு, டொனால்ட் டிரம்ப்பின் 57% பங்குகளை $5.2 பில்லியன் மதிப்புடையதாக ஆக்கியது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் பங்கு விலை $11.75 ஆக குறைந்தபோது $1.4 பில்லியனாக அவருடைய நிகர மதிப்பு சரிந்தது.

டொனால்ட் டிரம்பின் DJT பங்குகள்: டொனால்ட் டிரம்பின் DJT பங்குகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும், அவருடைய சோஷியல் நெட்வொர்க் பங்குகளின் விலையை உயர்த்தி அவருடைய ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பை $ 5.5 பில்லியன் டாலராக உயர்த்தியது. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் DJT பங்குகளின் விலை $ 2.4 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் அதிலிருந்து 2 மடங்கு அதிகரித்து தற்போது $5.5 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரம்பின் செல்வம் எங்கிருந்து வருகிறது?: டிஜேடி பங்குகளில் பில்லியன்கள் இருந்தாலும், டிரம்பின் அசல் செல்வம் ரியல் எஸ்டேட், நியூயார்க் நகரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களில் இருந்து வருகிறது. டொனால்ட் டிரம்பின் தந்தை குயின்ஸ் மற்றும் புரூக்ளினில் 27,000-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளை கட்டிய நியூயார்க் நகர ரியல் எஸ்டேட் டெவலப்பர்.

ட்ரம்ப் தனது தந்தையின் மூலம் பெறப்பட்ட $1 மில்லியன் கடனை வைத்துதான் தனது சொந்த வணிகத்தை உருவாக்கியதாகக் கூறியுள்ளார். அதில் இப்போது புளோரிடாவில் உள்ள Mar-a-Lago கிளப் மற்றும் மன்ஹாட்டனில் உள்ள டிரம்ப் டவர் போன்றவை அடங்கும். ப்ளூம்பெர்க் செய்தியின்படி, மன்ஹாட்டனில் உள்ள அலுவலக கட்டிடமான 1290 அவென்யூ ஆஃப் தி அமெரிக்காஸில் அவரது $500 மில்லியன் பங்குகள் அவரது மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாக உள்ளது, அதே நேரத்தில் அவரது டிரம்ப் நேஷனல் டோரல் மியாமி கோல்ஃப் ரிசார்ட் மதிப்பு $300 மில்லியன் ஆகும்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/record-breaking-film-amaran-four-days-rs-150-crore-collection/

கிரிப்டோ, NFT-கள் மற்றும் பைபிள்கள் மூலம் ட்ரம்ப் பெற்ற வருமானம்: கிரிப்டோகரன்சிகள் மற்றும் NFT-கள் போன்ற டிஜிட்டல் சொத்துக்களிலிருந்தும் டிரம்ப் வருமானம் பெறுகிறார். தனது பெயரை பைபிள்கள் முதல் ஸ்னீக்கர்கள் வரை பல்வேறு பொருட்களுக்கு பயன்படுத்த உரிமம் வழங்கி, அதன் மூலமும் பணம் சம்பாதிக்கிறார்.

 

Share This Article
Leave a review