தென்காசி மாவட்டம், அடுத்த சங்கரன்கோவில் நகராட்சியில் வைத்து நகரமன்ற கூட்டமானது நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. அதில் சங்கரன்கோவில் நகராட்சிககு உட்பட்ட 30 வார்டுகளில் இருந்தும், 30 நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் ஆரம்பித்த சில நேரத்தில் நகராட்சி இடத்தை குத்தகை ஏலம் விடுவது தொடர்பான விவாதம் கூட்டத்தில் எழ ஆரம்பித்தது. அப்போது நகர மன்ற துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜு நகராட்சி ஆணையாளர் சட்டத்திற்கு புறம்பாகவும்,

தனி மனிதனுக்கு ஆதரவாகவும் நகராட்சி நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஆதரவாக செயல்பட்டதை குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆணையாளருக்கும் நகர மன்ற துணை தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனால் கோபம் அடைந்த நகர்மன்ற துணைத்தலைவர் ஆணையாளரை பார்த்து நீ யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கிராய் என்ற விவரத்தை வெளியிடுவேன் என ஆவேசமுடன் கூறினார்.

அதை தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நகராட்சி ஆணையாளரை பார்த்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர். அதை தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலை பெறாமலேயே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக நகராட்சி ஆணையாளர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரியும் கண்டிக்க ஆரம்பித்தார். அதை தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் காரசார விமானங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து தனிமனிதனுக்கு ஆதரவாகவும்,

சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்படும் நகராட்சி ஆணையரை கண்டித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்வதாக கூறி நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினர்.