கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்போது நேற்று இரவு கோவை மாநகர பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது.

கோவையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவையில் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வால்பாறையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. தற்போது வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் குளிக்கவும் இறங்கிப் பார்க்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.