அடித்தது ஜாக்பாட் : முதல் முறை எம்.எல்.ஏ.வான ராஜஸ்தான் புதிய முதல்வர் – பஜன்லால் சர்மா..!

2 Min Read

ஒன்பது நாள் இழுப்பறிக்கு பிறகு ராஜஸ்தான் புதிய முதல்வராக முதல் முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியானது.

- Advertisement -
Ad imageAd image

இதில் சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜகவும், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், டிசம்பர் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் மிசோரம் மாநிலத்தில் லால் து ஹோமோவும் முதல்வராக பதவி ஏற்றனர். ஆனால் பாஜக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் புதிய முதல்வர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒரு வாரம் தாமதத்திற்கு பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டீஸ்கர் புதிய முதல்வராக விஷ்ணு தேவ்சாய் தேர்வு செய்யப்பட்டார். அங்கு முன்னாள் முதல்வர் ராமன் சிங்கிற்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.

பஜன்லால் சர்மா, பாஜக

இதே போல் நேற்று முன்தினம் நடந்த மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அவரது அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இடம் பெற்று இருந்த உஜ்ஜைனி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று பெரும் குழப்பத்திற்கு மத்தியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. மேலிடப்பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே ,சரோக் பாண்டே மற்றும் ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளரான ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஜெய்ப்பூர் வந்தனர். அவர்களை பாஜக மாநில தலைவர் சி.பி ஜோஷி, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வரவேற்றனர். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

பஜன்லால் சர்மா

இந்த கூட்டத்தில் முதல் முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை முதல்வர் பதவி கனவில் இருந்த முன்னாள் முதல்வர் வசந்தரா ராஜே வெளியிட்ட எம்.பி பதவியில் இருந்து விலகிய அரச குடும்பத்தை சேர்ந்த தியாகுமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வாசுதேவ் தேவ்னானி சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த பஜன்லால் சர்மா புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று அவரை பதவி ஏற்க வரும்படி கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அழைப்பு விடுத்தார்.

Share This Article
Leave a review