காரைக்குடியில் காதலர் தினத்தை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் நடத்தி வைத்த இந்து முன்னணியினர். இதனால் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருடந்தோறும் நூதன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்குள்ள 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர். அப்போது காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், அடுத்த காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்ட பொது செயலார் அக்னி பாலா தலைமையில் மேற்கத்திய கலாச்சாரம் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் நாடக காதலும், நாய்கள் காதலும் ஒன்றே என்ற அழைபிதலுடன் காதலர் தினத்துக்கு எதிரிப்பு தெரிவித்து நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் செய்து வைக்கப்பட்டது.

அப்போது 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னனி சார்பில் பூங்காவில் காதலர் தினத்தன்று காதல் செய்த காதல் ஜோடியினருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதனால் இந்து முன்னனியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் இருந்து காதலர் தினத்தன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாய் நாய்களுக்கு கல்யாணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்து முன்னணியினர்.

அப்போது காதலர் தினமென்ற பேரில் பொது இடங்களில் சில காதலர்கள் தகாத செயல்களை செய்கின்றனர். இதனை கண்டித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர். பின்பு காதலர் தினம் என்ற பெயரில் சிலர் காதலர் தினத்தில் பொது இடங்களில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

அப்போது காதல் என்ற போர்வையில் கலாசாரத்தை சீரழிக்கின்றனர். மேலும் பொது இடங்களில் எல்லை மீறலில் ஈடுபடுகின்றனர். அதை கண்டிக்கும் விதமாக நூதன திருமணமான நாய்க்கும் நாய்க்கும் செய்து வைத்துள்ளோம்’ என்றனர்.