- விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தஞ்சாவூரில் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தினால் தான் கௌரவ பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில் கௌரவ பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருந்தாலும் பல்வேறு இடங்களில் பற்றாக்குறை இருப்பதனால், விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தார். துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் குறித்து அனைவரும் அறிவார்கள். முதலமைச்சர் தக்க கவனம் செலுத்தி வருகிறார்.
சுயமரியாதை இழக்காமல் ஒரு மாநிலத்தின் தன்மையை கட்டிக்காக்கும் நிலையில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அனைத்து துறைகளையும் விட கல்வித்துறைக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கி வருவதாக தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/early-warning-action-has-started-as-northeast-monsoon-is-about-to-start-in-tamil-nadu/
பேட்டி.கோவி.செழியன் அமைச்சர்
உயர்கல்வித்துறை.