பழநி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு
பழனி கிரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்ற. பட்டு விட்டதா ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற கிளை உத்தரவு.
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ,
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.இந்நிலையில் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் , மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ,பழனி நகராட்சி தரப்பில்,
பழனி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் 364 கட்டுமானங்கள் , பழனி நகராட்சி நிர்வாகம் தரப்பில் அடையாளம் காணப்பட்டு, 364 கட்டுமானங்களுக்கான வரை பட அனுமதி, உள்ளிட்ட அனுமதி ஆவனங்களை பழநி நகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என. உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
உரிய வரைபட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்தால், உரிய அதிகாரிகள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கபப்படும் கிரி வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் ,பழனி மலை கோவிலுக்கு திரு விழா காலங்களில் 7 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.கிரி வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் , விழா காலங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு. எனவே பொது மக்கள் நலன் கருதி இது போன்று நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது.
என தெரிவித்த நீதிபதிகள், கிரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்ற. பட்டு விட்டதா . ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தர விட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்..