புதிதாக வாங்கிய கார் பழுதடைந்த நிலையில் அதனை பழுது பார்ப்பதற்காக டாட்டா சர்வீஸ் சென்டரில் விட்ட நிலையில் கார் மாயமானதால் காரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் சர்வீஸ் சென்டர் இன் அலட்சியத்தாலே கார் தொலைந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
புழல் சூரப்பேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் இவர் சொந்தத் தொழில் செய்து வருகிறார் .இந்த நிலையில் இவர் தனது வேலைகளுக்கு பயன்படுத்துவதற்காக புதிதாகடாட்டா சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
இந்த கார் வாங்கிய முதலே தொடர்ச்சியாக பழுது ஏற்பட்டு வந்துள்ளது பலமுறை சர்வீஸ் செய்து வந்த நிலையில் இந்த மாதம் ஏழாம் தேதி காரின் பின்பக்க கதவு லாக் சரியாக பயன்படுத்த முடியாமல் மீண்டும் பழுதடைந்து. அதனை அடுத்து சென்னை மாதவரம் ரவுண்டானா அருகாமையில் உள்ள எஃப் பி எல் டாடா கார் சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் காக விட்ட நிலையில் மூன்று நாட்கள் கழித்து போன் மூலம் தொடர்பு கொண்டு கார் சரியாகி விட்டதா என கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு தகுந்த பதிலளிக்காமல் சமாளித்ததாக கூறப்படுகிறது.
பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் சரியான பதில் கிடைக்காததால் மீண்டும் சர்வீஸ் சென்டரில் நேரடியாக உரிமையாளிடமே கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு உங்களுடைய காருக்கு நீங்கள் இஎம்ஐ செலுத்தாமல் விட்டு உள்ளீர்கள் அதனால் காரை எடுத்துச் சென்று விட்டார்கள் என்று சொல்லி உள்ளார்கள் அதற்கு கணேஷ் நான் காருக்கு முழுமையாக இ எம் ஐ கட்டி வருகிறேன் என்று சொல்லி உள்ளார் உடனே இணைப்பை துண்டித்து விட்டு
மீண்டும் கணேஷ் போன் செய்த பொழுது உங்களுடைய கார் எங்களுடைய கார் யார்டில் இருந்து யாரோ திருடி சென்று உள்ளார்கள் என்றும் இதற்காக நாங்கள் புகார் அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள்
இதனைத் தொடர்ந்து கணேஷ் மாதாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை தனது கார் எங்கு உள்ளது எப்படி காணாமல் போனது என்பதைப் பற்றி விவரங்களை கார் சர்வீஸ் சென்டர் நிர்வாகம் அளிக்க மறுப்பதாக கணேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கார் வாங்கியதில் இருந்து பழுதடைந்து வந்த காருக்கு மாற்றாக வேறு கார் தரவேண்டும் என்றும தனது காரை சரியாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டிய சர்வீஸ் சென்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கணேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.