குமரியில் கனமழையால் அரசு பேருந்துக்குள் அருவி குடை பிடித்தபடி பயணம்

1 Min Read
குடையுடன் பயனிகள்

தமிழகத்தில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.பொது மக்கள் பெரும்பாலும் பேருந்து பயனத்தைதான் மேற்கொள்கிறார்கள்.மழைக்காலங்களில் அந்த பயனமும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கோதையாறு மலை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் 313 E அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்துள்ளது. இந்த மழையில் பேருந்து உள்ளே மழை நீர் அருவி போல் கொட்டி வந்ததால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் குடை பிடித்தபடி பயணம் செய்தனர்.

விடாமல் மழை பெய்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குடை பிடித்தபடியே பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய அவலமும் அரங்கேறியது.மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதிகாரிகளின் மெத்தன போக்கும் இது போன்ற நிகழ்விற்கு காரணம்.அரசு பேருந்துகளை முறையாக பராமரிப்பதே காரணம்.இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதே நிலை தான்.மழைக்காலங்களில் இது போல பயனம் பாதுகாப்பில்லாமல் செல்லுவது ஏற்க்க முடியாதது.அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share This Article
Leave a review