கனமழை எதிரொலி : ஆழியார் கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

1 Min Read

கனமழை எதிரொலி காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது வனத்துறை.

- Advertisement -
Ad imageAd image

கடந்த இரண்டு நாட்களாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது.

கனமழை எதிரொலி

இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட் சண்முகா எஸ்டேட் அட்டகட்டி போன்ற பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதனால் தடுப்பு வேலிகள் அனைத்தும் உடைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணி நலன் கருதி அருவிக்கு செல்ல தற்போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வனத்துறை

மேலும் நீர்வரத்து குறைந்த உடன் தடுப்பு சீரமைக்கப்பட்டவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review