குடிநீர் கை பம்பு இருப்பதே மறந்து சாலை அமைத்த காண்ட்ராக்டர்

1 Min Read
கை பம்பை மூடி சாலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு சாலை அமைக்க வலியுறுத்தி வந்தனர். இன்று நிறைவேறும் நாளை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாலை போடும் பணி தொடங்கியது.  5 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை  அமைக்க நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

மக்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. குண்டும், குழியுமாக மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் சாலையாக இருந்த மாரியம்மன் கோவில் தெரு, புது பொலிவுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட போகிறது என்று.

மூடப்பட்ட கை பம்ப்

அதே போன்று அந்த ஊர் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி ஒரு அடிபம்பும் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக அமைந்திருக்கிறது.

சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் புதிய சாலை போடும்போது குடிநீர் அடிபம்பு பயன்பாட்டில் இருந்ததை கணக்கில் கொள்ளாமல் அடிபம்பை புதைத்து சிமெண்ட் சாலை அமைத்துள்ளார்.

அடிபம்பை மூடி சிமெண்ட் சாலையில் அமைக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கை பம்போடு போட பட்ட  சாலையை வீடியோ எடுத்து அந்த ஊர் மக்கள் அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review